காபிக்குப் பட்ட பாடு!!!

I
Ilango Ramasamy
காபிக்குப் பட்ட பாடு!!!

ஊட்டுக்கார ஆம்பள பய விடிய விடிய கண்ணு முழிச்சு எதையோ வெட்டி முறிச்சிக்கிட்டு இருக்கறானே, பாவம் நெம்ப களப்பா அசரிக்கையா இருக்கும்னு நெனைக்கறவங்கள்லாம் சாதரண குடும்ப இஸ்திரிங்க.

"க்கும் கெழட்டு நாயி கழட்டுற கழட்டு கழனித் தண்ணிக்குக் கோட பிரயோசனமில்ல. இந்த லச்சணத்துல டீ காப்பி கேக்கு தாக்கும்" னு தாவாக் கட்டய வெடுக்குன்னு திலுப்பி தோள்பட்டைல நங்குன்னு ஒரு முட்டு முட்டிட்டுப் போய் கம்பூட்டரூ பொட்டியத் தட தடன்னு தட்டுனா அது என்ற தலைவின்னு அர்த்தம்.

அஞ்சாப்பு தமிழ கூட ஒழுங்கா எழுத்துக் கூட்டிப் படிக்கத் தெரியாம அரையுங் கொறையுமா பாத்துப் போட்டு அதென்னங்கம்முணி உங்களயப் போயி தலவலி கிலவலின்னு செல்லிக்கிட்டுத் திரியராப்புல? ஊட்டுல அப்பப்ப பூசை போடறீங்ளா? இல்லீங்ளா? என வத்தி வக்க வரிசைல வாரவய்ங்களுக்குப் பூராம் காலரா வந்து காலோட போவணும்னு சொத்த மேட்டுப்பட்டி சூரவள்ளியம்மங் கோயில்ல உளுந்து கும்புட்டு வந்துருக்கேன் பாத்துக்குங்க. அதனால சூதானமா நடந்துகிடனுஞ் சரியா?

அதனால காபி கேட்டா ரெண்டு காதும் ரெம்பி வளியறாப்புல கழுவி ஊத்துவாங்களேங்கற பயத்தோடயே சமயல் ரூம்புக்குப் போனனுங்களா?

அங்க நாம் போய்ப் போகாங்காட்டியும் தலைவிக்கு மூக்கு வெடச்சிக்கிட்டு.

"ப்பா ஒரு நிமிசம் இங்கிட்டு வந்துட்டுப் போங்க"

நானதுக்குள்ற பளய சோத்துப் பொட்டில இருந்து பால எடுத்து டம்ப்ளாருல ஊத்திட்டேன். ஊத்திப் போட்டு, சூடு பண்ற பொட்டிய ஒன்ற நிமிசம் சுத்தராப்புல செட்டப்ப பண்னுனேன்.

அதுக்குள்ற தலவிக்குக் கோவங் குருத்தப் புடிச்சி ஆட்ட ஆரம்பிச்சிட்டது. "இன்னொருக்கா கூப்புடறதுக்குள்ற இங்க வந்து நிக்கிலீன்னா மண்டயப் பொளக்கப் போறம் பாத்துக்கடீ" ன்னு கிலியேத்துனாங்க.

அதனால பார்திவனக் கண்ட வடிவேலாட்ட தடாபுடான்னு ஹாலுக்குப் போய் "வந்துட்டனுங்கம்மணி" ன்னு நின்னேனா?

தலவிக்கு என்னயப் பாத்து வாய் கொள்ளாத இளிப்பு..... "இந்தா இந்த டம்ப்ளார வாங்கிக்கிட்டு அப்புடியே அந்தக் காத்தாடியப் போட்டுட்டுட்டுப் போங்க" என்றார்.

"இதுக்குத் தானா இத்தன அலப்பற? " ன்னு ரோசன ஒடிக்கிட்டிருக்கறப்பவே "உள்ற வெச்ச பாலு பொங்கித் தொலச்சிருக்கப் போவுதுன்னு படபடப்பாயிப் போச்சு. அந்தக் கருமத்தக் கலுவிச் சுத்தம் பண்றதுமில்லாம அதுக்குத் தனியா ஒரு மண்டகப் படி வாங்கோணுமேன்னு வெசனமாயிருச்சி.

அந்த அவசரத்துல வேகமா ஓடுனவங் காலு கட்ட வெரல நெலவுகாப்படில இடிச்சிக் கிட்டேன். "அடங்கொப்பந்தன்னானே" ன்னு தொண்டக்குழி வரைக்குஞ் சத்தம் வந்துட்டுது. ஆனா தலவிக்குத் தெரிஞ்சா உளுந்து பொரண்டு சிரிப்பாகளே அது புண்ணாக் கெடக்குற கும்பில சுக்க வெச்சு ஊதுனாப்புல காந்துமேன்னு நவண்டக் கடிச்சுக்கிட்டு பொட்டாட்ட நொண்டி நொண்டி சமயல் ரூம்புக்குள்ற போனா....

சுட வெக்கற பொட்டி தன்னால சுத்திக் கிட்டிருக்குது... பக்கத்துல ஊத்தி வெச்ச பாலு செவனேன்னு கோந்துருக்குது....

ஒரு கா டம்ப்ளரு காப்பிக்கி இத்தன அக்கப்

போரு ..... யாரச் சொல்லி என்னத்தப் பண்ண? எல்லான்நா வாங்கியாந்த வரம்

0 வாசிப்புகள்
பகிர்: 0 பகிர்வுகள்

கருத்துகள் (0)

இன்னும் கருத்துகள் எதுவும் இல்லை. முதல் கருத்தை எழுதவும்!