நாம சொல்றத புரிஞ்சிக்கிட்டு நம்ம எதிர்பார்ப்புக்குத் தக்க படம் பிடிக்கக் கூடிய நண்பர்கள் வாய்ப்பது வரம்.
நம் எதிர்பார்ப்பையும் தாண்டி சுய சிந்தனையோடு அழகைக் கூட்டி, தங்கள் பார்வையையும் சேர்த்துப் பதியும் நண்பர்கள் வாய்ப்பது அரிதினும் அரிதான வரம்.
அப்படி எனக்கு வாய்த்த நட்பு Vijayakumar Chandran. கூடாரத்திற்குள் படுத்துக் கொண்டு விளக்கை ஒளிர விடுகிறேன் ஒரு அழகிய படம் பிடித்துக் கொடுங்கள் தலைவா என்றேன். "உங்க மொகரக்கட்ட தெரியாதே" எனத் தயங்கினார் .... "நானென்ன திருஷ்டி படமா எடுக்கச் சொல்றேன்? " எனக்கேட்க "சரி முயற்சி பண்றேன்" எனக் களமிறங்கினார்.
"வெளிச்சம் ரொம்ப அதிகமா இருக்கு பாஸ்" என வெளியே இருந்து அவர் குரல் கொடுக்க நான் கை விரல்களால் விளக்கை மூடி சிதறும் ஒளியின் அளவைக் கட்டுப்படுத்தினேன். அவருக்குத் திருப்தி கிட்டும் வரையில் பல முறை திருத்தங்கள் கூறி தனக்கு வேண்டியதைப் பெற்றுக் கொண்டார்.
என் நினைவின் சேகரிப்பாக ஒரு மிகச்சிறந்த கணத்தைப் பதிந்து பரிசளித்தார்.
இப்படத்தில் நாங்கள் இருவருமே இல்லை. ஆனால் இக் கூடாரத்தின் உள்ளே நானும் வெளியே அவரும் எப்போதும் இருந்து கொண்டிருப்போம். எங்கள் நட்பும்.
இது ஒரு பொக்கிஷம்!!!