இது ஒரு அன்புப் பரிசா திருப்பூர்ல இருந்து எனக்குக் கொடுத்தனுப்பப்பட்ட டிஷர்ட். சில வருடங்களாக என்னிடம் இருக்கிறது. மிக அரிதாக ஏதாவது ஒரு சாதாரண மனநிலையில் எதிர்பாரத தருணத்தில் இதனை எடுத்து அணிந்து கொள்வேன். இது வரை மொத்தமே ஆறேழு முறை மட்டுமே பயன்படுத்தியிருக்கிறேன்.
இதனை அணியும் போது மனம் குழந்தையாகி விடும். ஒரு பெரும் உற்சாகம் என்னைத் தொற்றிக் கொள்ளும்.
Hakuna Matata என்றால்
No worries,
No Problem,
No trouble என்றர்த்தம்... அதாவது
"குறையொன்றும் இல்லை"
M. S. அம்மா பாடிய அந்தப் பாடலும் எனக்கு வாழ்வில் மிகப் பிடித்தமான சங்கதிகளுள் ஒன்று....
"அந்த விண்ணில் ஆனந்தம்
இந்த மண்ணில் ஆனந்தம்
அடி பூமிப் பந்தை முட்டி வந்த புல்லில் ஆனந்தம்
வெயிலின் சுத்தம் ஆனந்தம் மழையின் சத்தம் ஆனந்தம்
அட மழையில் கூடச் சாயம்போகா வானவில் ஆனந்தம்
வாழ்வில் நூறானந்தம்
வாழ்வே பேரானந்தம் பெண்ணே
நரை எழுதும் சுயசரிதம்
அதில் அன்பே ஆனந்தம் ஆனந்தம் ......
என இன்று மனம் சற்று அதீதமாகக் குதியாட்டம் போடுகிறது.
கல்வியாண்டின் முதல் பருவம் முடிவுக்கு வருகிறது. அனைத்துச் சலிப்பூட்டும் வேலைகளும் முடிந்து விட்டன. இன்றைய உடற் பயிற்சியில் அனல் பறந்தது. மாலை உணவு பிரமாதம்... நாளை மிகவும் இலகுவான நாளாக இருக்கப் போகிறது. இப்படிக் குட்டிக் குட்டியாக எனது மகிழ்ச்சியான மன நிலைக்குப் பின்னே பல காரணங்கள்.
ஒரு பழைய டிஷர்ட்ட எடுத்து மாட்டி அதத் தொட்டு இத்தன சில்ற விசயத்த அச போட்டு அசபோட்டு நொரைச்சுப் பொங்கிப் பெருகற சந்தோஷத்த, பொங்குற பால்ல தண்ணியத் தெளிச்ச மாதிரி....
"காது என்ன அவிஞ்சா போச்சு, தொண்டத் தண்ணி வத்த எத்தன தடவ கத்துறேன்.... என்னன்னு கேட்டா குடியா முழுகிரும்" ன்னு ஆரம்பிச்சு,
"கோவனாண்டி சகஸ்ரநாமம் பாட ஆரம்பிச் சுட்டாங்க" இனி அந்தப் பாட்டு நிக்க வெகுநேரமாகும் ....
தலைவி குரலில் வாங்கும் திட்டும் தனியானந்தம்...
அவரின் கையால் வாங்கும் ஒவ்வொரு குட்டும் பரமானந்தம்....
ஒவ்வொரு மொத்துமானந்தம்....
உள்ளிருந்து தலைவி:
"ஏய்......."
மீ: இந்தா வந்துட்டேன் .....
ஹக் கூனா மட்டாட்டா
Hakuna matata, what a wonderful phrase
Hakuna matata, ain't no passin' craze
It means no worries for the rest of your days
It's our problem-free philosophy
Hakuna matata (Hakuna matata, hakuna matata)
Hakuna matata (Hakuna matata, hakuna matata)
Hakuna matata, hakuna matata
Hakuna matata
Ah-ooh, matata
Hakuna matata, yeah
Da, da-da, ha-ha-ha....
நாணயத்திற்கு இருபுறமும் இருந்தால் தானே மதிப்பு .... நிழலின் அருமை வெயிலில் தானே தெரியும்.... என் வாழ்வில் தலைவி யில்லையேல் நான் எப்படி மகிழ்ந்திருக்க....
Hakuna Matata .... yeah.... Hakuna Matata .....
Yeh yeh yeh yea aa ahhh......